வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரி கிளிநொச்சியில் தமிழரசு கட்சியின் மே தினம் நடத்தப்பட்டுள்ளது. காலை ஒன்பது மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றில் ஆரம்பிக்கப்பட்ட மே தின ஊர்வலம் டிப்போச் சந்தியை சென்றடைந்தது. அங்கு பொதுக் கூட்டமும் இடம்பெற்றது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரி தழிழரசு கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஊர்வலத்தின் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் அரசில் கைதிகளை சித்தரிக்கும் வகையில் ஊர்திகளும் காணப்பட்டன..
இந்த மேதினத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சாள்ஸ் நிர்மலநாதன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, சிவஞானம் சிறிதரன், வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, மாகாண சபை உறுப்பினர் பசுபதிபிள்ளை உள்ளிட்டவர்களும் நூற்றுக்கணக்கான காணாமல் ஆக்கப்ட்டவர்களின் உறவினர்களும் கலந்துகொண்டனர்.
Spread the love
Add Comment