முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தொடர்பில் தாம் வெளியிட்ட கருத்து சரியானதே என டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அவசர நிலைமைகளின் போது அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி பாதுகாப்பு தரப்பு முக்கிய பொறுப்பு ஒன்றை சரத் பொன்சேகாவிடம் வழங்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் இணக்கத்துடன் தாம் கருத்து வெளியிட்டதாக ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அமைச்சர் ராஜிதவின் கருத்து அரசாங்கத்தை நெருக்கடியில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளதாக அண்மையில் அமைச்சர் ஜோன் செனவிரட்ன கருத்து வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Add Comment