பாகிஸ்தானில் பேரூந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் இருந்து சிட்ரால் பகுதிக்கு 20 பயணிகளுடன் சென்ற குறித்த பேரூந்து மலைப்பாங்கான பகுதியில் ஒரு வளைவில் திரும்பும்போது பள்ளத்தில் வீழ்ந்ததினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக உள்ளுர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன்போது காயமடைந்தவர்கள் மீட்கப் பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கு மோசமான வீதிகளும், போக்குவரத்து விதிகளைச் முறையாகக் கடை பிடிக்காமையும், கவனக்குறைவாக வாகனங்களை செலுத்துவதுமே காரணம் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
Spread the love
Add Comment