முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் காலி முகத் திடலில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் பங்கேற்ற இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். கடுமையான வெப்பம் காரணமாக இவ்வாறு இவர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 80 மற்றும் 62 வயதுகளை உடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்று வெப்பத்தினால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Add Comment