இலங்கை

தெவிநுவர வெளிச்ச வீடு மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தெவிநுவர வெளிச்ச வீடு மக்கள் பார்வைக்காக எதிர்வரும் வியாழக்கிழமை (04) துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவினால் திறந்துவைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை துறைமுக அதிகார சபையினால் நடாத்தப்படுகின்ற தெவிநுவர வெளிச்ச வீடானது 1887ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. சிறிமத் ஜேம்ஸ் நிக்கலஸ் டக்லஸினால் இவ்வெளிச்ச வீடு பிரித்தானிய பவுன் 30, 000  செலவில்; நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

07 மாடிகளை கொண்ட இவ்வெளிச்ச வீட்டின் உயரம் 49 மீட்டர்கள் என்பதுடன் 196 படிகளைக்  கொண்டுள்ளது. இலங்கையிலுள்ள நான்கு சர்வதேச வெளிச்ச வீடுகளுள் இதுவும் ஒன்றாகும்.  2000ம் ஆண்டு இலங்கை துறைமுக அதிகார சபையினால் புனரமைக்கப்பட்ட இவ்வெளிச்சவீடு பாதுகாப்பு பிரச்சினைகள் மற்றும் உட்பிரவேச வாயிலில் காணப்பட்ட இக்கட்டான நிலை காரணமாக மக்கள் பார்வைக்காக இதுவரை திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply