மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக போராட்டங்களை நடத்தப்படும் என இலங்கை போக்குவரத்துச் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. உயர்கல்வியை தனியார் மயப்படுத்த அனுமதிக்க முடியாது என இலங்கை போக்குரத்துச் சபை தெரிவித்துள்ளது. இவ்வாறான பல்கலைக்கழகங்களை அமைப்பதனால் அரச பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்துச் சபையின் தொழிற்சங்கங்களே இவ்வாறு போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளன. பஸ் சாரதிகள் நடத்துனர்களைப் போன்று மருத்துவர்களை உருவாக்கிவிட முடியாது என தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 5ம் திகதி இந்தப் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
Spread the love
Add Comment