ஹொரணை பிரதேசத்தில் 31 லட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹொரணை அரமனாகொல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றின் பணமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.
பணத்தை வைப்பிலிடுவதற்காக வங்கிக்கு எடுத்துச் சென்ற போது இராணுவச் சீருடைக்கு நிகரான உடையணிந்த தரப்பினரே பணத்தைக் கொள்ளையிட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்றவர்களே பணத்தை ஆயுதமொன்றைக் காண்பித்து இவ்வாறு பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Add Comment