தொழிற்சங்கப் போராட்டங்களை கண்டு அஞ்சப் போவதில்லை என சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கிலான அனைத்து போராட்டங்களையும் எதிர்நோக்கத் தயார் என குறிப்பிட்டுள்ள அவர் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் போராட்டங்களை நடத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொலைகாரர்கள், ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் மீளவும் ஆட்சி பீடம் ஏறுவதற்கு அனுமதிக்கப்படாது என தெரிவித்துள்ள அவர் அரசாங்கம் இவ்வாறான அச்சுறுத்தல்களைக் கண்டு அஞ்சாது எனவும் தெரிவித்துள்ளார்.
Add Comment