காணாமற்போன உறவுகளினால் வவுனியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று 70வது நாளை எட்டியுள்ள நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் தேங்காய் உடைத்து வழிபாடு மேற்கொண்டனர்.
இன்று மதியம் 12.15 மணியளவில் வவுனியா கந்தசாமி ஆலயத்திற்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்ட மக்கள் பின்னர் தேங்காய் உடைத்து நேர்த்தியில் ஈடுபட்டதுடன் தமது உறவுகள் குறித்த உண்மைகளை விரைவில் வெளியிட வேண்டும் எனவும் உருக்கமாக வேண்டிக் கொண்டனர்.
காணாமற்போன உறவுகள் தமது உறவுகளின் வெளிப்படுத்தலை வலியுறுத்தியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோருதல், அவசரகாலச்சட்டத்தினை இரத்துச் செய்யக் கோருதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 70 நாட்களாக வவுனியாவில் சுழற்சி முறையில் போராட்டம் மேற்கொண்டு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment