உலகம்

பிரித்தானிய ராணி 2ம் எலிசபெத்தின் கணவர் பிலிப் அரச பணிகளில் இருந்து ஓய்வு

பிரித்தானிய  ராணி 2ம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப், இந்த வருட கோடை காலத்துக்கு பின்னர் அரச பணிகளில் இருந்து ஓய்வு பெறுகின்றார் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. பிலிப்பின் முடிவை ராணி  முழுமையாக ஆதரித்துள்ளார் எனவும்  எனினும் ராணி தொடர்ந்து தனது கடமைகளை நிறைவேற்றுவார் எனவும் பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

எனினும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரை ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளில் பிலிப்  பங்கேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 96 வயதை எட்டும் அவர், ஓகஸ்ட் மாதத்துக்கு பின்னர் பொது நிகழ்ச்சிகளுக்கான அழைப்புகள் எதையும் ஏற்றுக்கொள்ளமாட்டார் எனவும்  எலிசபெத் ராணி  தொடர்ந்தும் தனது அதிகாரபூர்வ நிகழ்ச்சிகளில் முழுமையாக பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 9 other subscribers