இந்தியா

ஹிந்தி பாடத்தை கட்டாயமாக்கும் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இந்தியா  முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஹிந்தி பாடத்தை கட்டாயமாக்க கோரி தாக்கல் செய்த பொது நல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.  இந்தியா  முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளலும் 8 ஆம் வகுப்பு வரை ஹிந்தியை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் அஸ்வினிகுமார் உபாத்யாயா உச்சநீதிமன்றத்தில் பொது நலமனு ஒன்றை தாக்கல் செய்தார்.

மனுவில்  நீதித்துறையில் இருப்பவர்கள்கூட பெரிய அளவில் மொழிப் பிரச்சனையை சந்திக்கின்றனர் எனவும்  ஹிந்தியை கட்டாய பாடமாக்குவதுதான் இதற்கான தீர்வாக அமையும்  எனவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் சகோதரத்துவம், ஒற்றுமை, தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக மும்மொழி கொள்கையின் அடிப்படையில் ஹிந்தி மொழியை பாடசாலைகளில் அமல்படுத்துத்துமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்திருந்தார்.  குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்  மனுவை தள்ளுபடி செய்து  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply