சோமாலியாவில் அரச படையினர் நடத்திய தாக்குதலில் அந்நாட்டு அமைச்சர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 31 வயதான Abas Abdullahi Sheikh என்ற அமைச்சரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். தீவிரவாதி என்ற சந்தேகத்தின் பேரில் அரசாங்கப் படையினர் தவறுதலாக இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தலைநகர் மொகடிஸூவில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். சிறுவயது புகலிடக் கோரிக்கையாளரான Abas Abdullahi Sheikh கடந்த ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதுடன், இந்த ஆண்டு அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார். அல் கய்தா இயக்கத்துடன் தொடர்புடைய தீவிரவாதிகள் சோமாலியாவில் குழப்பங்களை விளைவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment