விளையாட்டு

சாம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் இந்தியா பங்கேற்க வேண்டும் – சச்சின், ட்ராவிட்

 
சர்வதேச கிரிக்கட் பேரவையின் சாம்பியன்ஸ் கிண்ண போட்டித் தொடரில் இந்தியா பங்கேற்க வேண்டுமென முன்னாள் வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராஹூல் ட்ராவிட் ஆகியோர் தெரிவித்துள்ளனர். பெரும் எண்ணிக்கையிலான முன்னாள் வீரர்கள் இந்தியா இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்க வேண்டுமென தங்களது விருப்பத்தை வெளியிட்டுள்ளனர்.

சஹிர் கான், குண்டப்பா விஸ்வநாத், சஞ்சய் மஞ்ரேகர், ஆகாஸ் சோப்ரா, அஜித் அகார்கர், வெங்கடேஸ் பிரசாத், சபா கரீம், முரளீ கார்த்திக் மற்றும் தீப் தேஸ்குப்தா ஆகியோரும் இவ்வாறு ஆகியோர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும், சாம்பியன்ஸ் கிண்ணப் போட்டித் தொடரில் இந்தியா பங்கேற்பதனை இன்னமும் இந்திய கிரிக்கட் வாரியம் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply