வடகொரிய தலைமையை கொலை செய்ய அமெரிக்கா சதித் திட்டம் தீட்டுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவும் தென்கொரியாவும் கூட்டாக இணைந்து வடகொரியாவின் அதி உயர் தலைமையை கொலை செய்ய சூழ்ச்சி செய்வதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. உயிரி இரசாயன ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள வடகொரிய பாதுகாப்பு அமைச்சு அமெரிக்க மற்றும் தென்கொரிய உளவுப் பிரிவினர் இந்த முயற்சியில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் நடவடிக்கைகள் எல்லை கடந்துள்ளதாகவும், அவர்களின் கனவு பலிக்காது எனவும் வடகொரிய பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வடகொரிய அதி உச்ச தலைமையை பழிவாங்கும் நோக்கில் இவ்வாறு தாக்குதல் சதித் திட்டம் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
Spread the love
Add Comment