சென்னையில் நேற்று இரவு நடிகை குஷ்பு வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும் அது சில மணி நேரங்களில் வெடிக்கும் எனவும் 108 அம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி அழைப்பினைத் தொடர்ந்து காவல்துறையினர் ஆத தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குஷ்பு குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்றுள்ள நிலையில் காவல்துறையினர் வெடிகுண்டு நிபுணர்களின் உதவியுடன் வீட்டில் சோதனை நடத்திய போதும் வெடி பொருட்களோ, சந்தேகத்துக்கிடமாக எந்த பொருளுமோ சிக்கவில்லை எனவும் இது வெறும் புரளி எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் காவல்துறையினர் குறித்த தொலைபேசி அழைப்பினை விடுத்த நபரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
Add Comment