தங்களது அமைச்சுப் பதவியில் மாற்றம் செய்ய வேண்டாம் என ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியுள்ளது. அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் 19ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் பிரமருடன் கலந்தாலோசனை செய்தே அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதுடன்; தன்னிச்சையாக பிரதமரினால் அமைச்சுப் பதவியில் மாற்றம் செய்ய முடியாது எனத் தெரிவிக்கப்படுகிறது.
வெசாக் பௌர்ணமி தினத்திற்கு முன்னதாக அமைச்சரவையில் மாற்றம் செய்ய உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add Comment