கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிக்கை அம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா இன்று(09) சிறப்பாக இடம்பெற்றுள்ளது.இரணைமடுகுளத்தின் மேற்கு கரையில் யோகா் சுவாமிகளால் உருவாக்கப்பட்ட கனகாம்பிகை அம்மன் கிளிநொச்சி மக்களுக்கு முக்கியமாக இரணைமடுகுளத்தின் கீழான விவசாயிகளுக்கு மிகவும் நம்பிக்கைதரும் ஆலயமாக விளங்கி வருகிறது.
இன்று ஆயிரக்கணக்கான பக்கதர்கள் சூழ கனகாம்பிகை அம்மன் முருகன், பிள்ளையாா் ஆகியோா் மூன்று தேர்களில் வீதி உலா வந்து காட்சியளித்தனா். நாளை புதன் கிழமை தீர்த்த திருவிழா நடைபெறவுள்ளது.




Add Comment