198 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் புத்தளம் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பிரதிக் காவல்துறை மா அதிபர் காரியாலய புலனாய்வுப் பிரிவினர் இந்த நபரை கைது செய்துள்ளனர். சந்தேக நபர் கொழும்பைச் சேர்ந்தவர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கடல் வழியாக முத்துபன்திய தீவிற்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து அதி சொகுசு டிபென்டர் ரக வாகனத்தில் கொழும்பு நோக்கில் இந்தப் போதைப் பொருள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. சந்தேக நபர், மீட்கப்பட்ட போதைப் பொருள் மற்றும் வாகனம் என்பன சிலாபம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Add Comment