
மட்ரீட் ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில் நடப்புச் சம்பியன் நொவாக் டுஜொவிக் மற்றும் ரபால் நாடால் ஆகியோர் மூன்றாம் சுற்றுக்குத் தகுதி பெற்றுக்கொண்டுள்ளனர். நிகலோஸ் அல்மார்கோவுடன் நடைபெற்ற போட்டியில் 6-1, 4-6, 7-5 என்ற செற்க் கணக்கில் நிகலோஸை வீழ்த்தி, டுஜொவிக் வெற்றியீட்டியுள்ளார்.
இதேவேளை, மற்றுமொரு போட்டியில் ரபால் நடால் இத்தாலியின் பெபியோ பொகுனினியை 7-6 (3), 3-6, 6-4 என்ற செற் கணக்கில் வீழ்த்தி வெற்றியீட்டியுள்ளார். அரையிறுதிச் சுற்றில் டுஜொவிக், நடாலை எதிர்த்தாடுவார் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
Add Comment