இலங்கை பிரதான செய்திகள்

தங்களை எல்லோரும் கைவிட்டுவிட்டனர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆதங்கம்

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆகப்பட்டவர்களின் போராட்டம் இன்று 12-05-2017 எண்பத்தி இரண்டாவது நாளாக தொடர்கிறது.

கடந்த  20-02-2017  அன்று   காலை  கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட  தொடர் கவனயீர்ப்பு போராட்டமே இரவு பகலாக  தொடர்கிறது. தங்களை அனைவரும் கைவிட்டுள்ளதாகவும்,  82 ஆவது நாளாக தாங்கள் பல்வேறு நெருக்கடிகளுக்குள் மத்தியில் காணாமல் ஆக்ப்பட்ட தங்களின் உறவுகளுக்காக  அவர்கள் தொடர்பில் தீர்க்கமான முடிவை எதிர்பார்த்து கவனயீர்ப்பை ஆரம்பித்த   போதும்  இந்த போராட்டததை எவரும் கண்டுகொள்ள வில்லை என்றும் கவலை தெரிவிக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது கோரிக்கைகள்  நிறைவேறும் வரை போராட்டத்தை  கைவிடப் போவதில்லை என  தெரிவிக்கின்றனர்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap