இந்தியா

காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் குண்டு வீசி தாக்குதல் – ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

இந்தியாவின் காஷ்மீர் எல்லைப்பகுதியிலுள்ள  ரஜோரி மாவட்டத்தில்  இன்று காலை  பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீர் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.  அத்துடன் எல்லையோரப் பகுதி மக்கள் மீது பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டதாகவும இயந்திரத் துப்பாக்கிகளால் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், அப்பகுதியில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பாடசாலைகள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாகவும்  அம்மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு மட்டும் பாகிஸ்தான் ராணுவத்தினர் 268 முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply