உலகம்

கொலரா நோய் காரணமாக ஏமனின் தலைநகரில் அவசர நிலை சட்டம் பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது

ஏமன் நாட்டில் ஹவுத்தி போராளிகளின் பிடியில் உள்ள சனா நகரில் கொலரா  நோய்  பரவி வருவதால் நாட்டின் தலைநகரில் அவசரநிலை பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து சனா நகரில் கொலரா படுவேகமாக பரவத் தொடங்கியதையடுத்து, ஆட்சி நிர்வாகத்துக்கு பொறுப்பேற்றுள்ள ஹவுத்தி அரசின் நிர்வாகம் சனா நகரில் அவசர நிலை சட்டத்தை பிரகடணப்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் 27-ம் திகதியிலிருந்து நேற்றுவரை இந்நோய்க்கு ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர் எனவும்  சனாவை கடந்து அருகாமையிலுள்ள நகரங்களிலும் கொலரா நோய் வேகமாக பரவி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, ஏமனில் சுமார் மூவாயிரம் மக்கள் கொலரா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.  ஜனாதிபதிக்கெதிரான  உள்நாட்டுப் போரால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள  இங்கு வாழும் சுமார் 76 லட்சம் மக்கள் கொலரா அபாயத்துக்குட்பட்ட பகுதிகளில் வசித்து வருவதாகவும் உலக சுகாதார நிறுவனம்  சுட்டிக்காட்டியுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply