இலங்கையில் அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு உதவிகள் வழங்கப்படும் என சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் (Xi Jinping ) தெரிவித்துள்ளார். இலங்கை சிறிய தீவு என்ற போதிலும் துறைமுகம் மற்றும் கப்பல்துறைகளில் மிகவும் முக்கியமான ஓர் நாடு என குறிப்பிட்டுள்ள அவர் இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு தொடர்ச்சியாக உதவிகளை வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட உலகத் தலைவர்களுக்கு அளித்த விசேட வரவேற்பு நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Add Comment