Home இந்தியா தமிழக போக்குவரத்துக் கழக ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது:-

தமிழக போக்குவரத்துக் கழக ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது:-

by admin

போக்குவரத்துக் கழக ஊழியர் களின் காலவரையற்ற வேலைநிறுத் தப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகள் முடங்கியதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப் படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

13-வது புதிய ஊதிய ஒப்பந்தம் போட வலியுறுத்தி இவர்கள் போராட்டங் களை நடத்தி வந்த இவர்கள் 7 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகையை கேட்டுதான் போராடுகின்றனர். எனவே, தொழிற்சங்கத் தினரை அழைத்து முதல்வர் பேச வேண்டும். தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என தொழிசங்க பொதுச்செயலாளர் மு.சண்முகம் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More