இலங்கை பிரதான செய்திகள்

மஹிந்தவிற்கு பிழையான ஆலோசனை வழங்குவோர் தொடர்ந்தும் அவருடன் இருக்கின்றார்கள் – தயான் ஜயதிலக்க


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு  பிழையான  ஆலோசனை வழங்குவோர் தொடர்ந்தும் அவருடன் இருக்கின்றார்கள் என முன்னாள் இராஜதந்திரி டொக்டர் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஸ, அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த  இந்திய பிரதமரை சந்தித்திருக்கக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலி முகத் திடல் மே தினக் கூட்டத்தைப் பார்த்து இந்தியா மஹிந்தவுடன் சந்திப்பு நடத்த அழைக்கவில்லை எனவும், மோடியுடன் சந்திப்பு நடத்த சந்தர்ப்பம் வழங்குமாறு மஹிந்த கோரி இந்த சந்திப்பினை நடத்தியுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மஹிந்தவின் இரண்டாம் தவணை ஆட்சி; காலத்தில் அவருக்கு ஆலோசனை வழங்கிய தரப்பினர் தொடர்ந்தும் அவருடன் இணைந்திருக்கின்றார்கள் என்பதே தென்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.