நாளைய தினம் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் முக்கிய அமைச்சர் ஒருவர் இந்த அமைச்சரவை மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டால் தாம் சுயாதீனமாக இயங்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தாம் வேறு எந்தவொரு அமைச்சினையும் பொறுப்பேற்றுக் கொள்ளத் தயாரில்லை என ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இந்த அமைச்சர் அறிவித்துள்ளார்.
எனினும், இந்த கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் நேரடியாக பதில் எதனையும் அளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. நாளைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெறவுள்ளதாகவும் சில முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love
Add Comment