அமைச்சரவை மாற்றம் அரசாங்கத்தை பாதிக்கும் வகையில் அமைய இடமளிக்கப்பட முடியாது என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இதனைத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக பிரியந்த அமைச்சரவை மாற்றம் அரசாங்கத்தை பாதிக்கும் வகையில் அமைந்தால் அதற்கு எதிராக குரல் கொடுக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் உள்நோக்கங்களுக்காக அமைச்சரவையில் மாற்றம் செய்ய இடமளிக்கப்பட முடியாது என தெரிவித்துள்ள அவர் அரசாங்கத்தை விட்டு விலகப் போவதில்லை என்ற போதிலும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Add Comment