இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஏற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வந்திருந்த போது, மஹிந்த ராஜபக்ஸ மோடியை சந்தித்திருந்தார்.
இந்த சந்திப்பின் போது இந்திய பிரதமர், தமது நாட்டுக்கு வருமாறு மஹிந்தவிற்கு அழைப்பு விடுத்தார் என தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, விரைவில் மஹிந்த தலைமையிலான பிரதிநிதிகள் குழுவொன்று இந்தியாவிற்கு பயணம் செய்யும் என தெரிவிக்கப்படுகிறது.
Add Comment