
இலங்கைச் சிவசேனைத் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன், தமிழ்நாடு இந்து மக்கள் கட்சிச் செயலாளர் இராம இரவிக்குமார் மயிலாப்பூரில் அருள்மிகு கபாலீச்சரர் கோயிலில் இன்று (18) போரில் உயிர் நீத்த பல இலட்சம் தமிழருக்காக நீத்தார் வழிபாடு செய்தனர்.
நூற்றுக்கணக்கான சிவ அடியார்களும் தொண்டர்களும் இந்து மக்கள் கட்சித் தலைவர் அருச்சுனர் சம்பத்தர் தலைமையில் கூடி, வழிபாட்டில் பங்கேற்றனர். உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனும் வழிபட்டார்.


Add Comment