இலங்கை

மஹிந்த, கோதா தலைமையில் யுத்த வெற்றி கொண்டாடும் நிகழ்வு


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜக்ஸ ஆகியோரின் தலைமையில் யுத்த வெற்றியை கொண்டாடும் நிகழ்வு ஒன்று நடத்தப்பட உள்ளது. நாளைய தினம் இந்த விசேட நிகழ்வு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடத்தப்பட உள்ளது.

க்ளோபல் ஸ்ரீலங்கா போரம், தேசிய அமைப்புக்களின் கூட்டமைப்பு மற்றும் தேசிய படைவீரர்கள் அமைப்பு ஆகியன கூட்டாக இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளன. ‘வெற்றியீட்டிய தாய் நாட்டை பாதுகாத்துக்கொள்வோம் – படைவீரர்களை தனிமைப்படுத்த மாட்டோம்’ என்ற தொனிப் பொருளில் இந்த யுத்த வெற்றி நிகழ்வு நடத்தப்பட உள்ளது. பௌத்த நாயக்க தேரர்கள், முப்படைகளினது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர். நாட்டுப் பற்றுடைய அனைவரும் இந்த நிகழ்வில் பங்கேற்க முடியும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply