இலங்கை பிரதான செய்திகள்

இந்திய வாழ் இலங்கை அகதிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பது குறித்து அவுஸ்திரேலியா கவனம்


இந்திய வாழ் இலங்கை அகதிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பது குறித்து அவுஸ்திரேலியா கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழக மாநில அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து இவ்வாறு புனர்வாழ்வு திட்டங்களை முன்னெடுக்க அவுஸ்திரேலியா உத்தேசித்துள்ளது.

அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவின் ஆணையாளர்  Roman Quaedvlieg  தமிழகத்திற்கு  பயணம்  செய்துள்ளார். றோமன்  தமிழக பிரதம செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தமிழக அகதி முகாம்களில் வாழ்ந்து வரும் இலங்கை அகதிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பது குறித்து இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிப்போரை தடுத்து நிறுத்தும் நோக்கில் இவ்வாறான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. சட்டவிரோத ஆட்கடத்தல்களை தடுக்க அவுஸ்திரேலியாவிற்கு உதவிகளை வழங்க உள்ளதாக, தமிழக மாநில அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap