இலங்கை

இன்று மல்லவபிட்டிய ஜும்ஆப் பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையடுத்து பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை


இன்று அதிகாலை மல்லவபிட்டிய ஜும்ஆப் பள்ளிவாசல்  பெற்றோல் குண்டுத் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதைத் தொடர்ந்து   முஸ்லிம் பள்ளிவாசல்கள் மறறும் முஸ்லிம்களின் உடமைகளுக்கும் உயிர்களுக்கும்  உரிய பாதுகாப்புகளை  வழங்குமாறு குருணாகல்பிரதி பொலிஸ் மா அதிபர் கிரகரி குறேயைச் சந்தித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் முற்போக்கு முண்ணனியின் தேசிய அமைப்பாளர் அப்துல் சத்தார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முப்பது வருடகால யுத்த முடிவின் பின்பு முஸ்லிம்களை இலக்கு வைத்து மீன்டும் நாட்டில் ஒரு யுத்தத்தைஉருவாக்கும் நோக்குடன் சிங்கள முஸ்லிம் மக்களுக்கிடையில் பிரச்சனைகளை உருவாக்க்கூடிய பலநடவடிக்கைகளை  திட்டமிட்ட  தீய சக்திகள்  சில காலமாக முன்னெடுத்து வருகின்றன.

அலுத்கம கலவரம்  ஏற்பட்டதன் பின்பு தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு மேலாக பள்ளிவாசல்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.  இன்றும் அப்படியான ஒரு அச்ச சூழ் நிலை முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது

விசேடமாக எதிர் வரும் நோன்புக்காலம்பெண்கள் உட்பட முஸ்லிம்கள் இரவுக் காலங்களில் பள்ளிவாசல்களுக்கு செல்வதற்குறிய தேவை இருப்பதால் இதற்குறிய பாதுகாப்பு இல்லாததால் உடனடியாக முஸ்லீம்களுக்குறிய பாதுகாப்பு ஏறபாடுகளை செய்து தருமாறு அப்துல் சத்தார் வேண்டுகோள் விடுத்தார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் முற்போக்கு முண்ணனியின் ஊடககுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply