இலங்கை பிரதான செய்திகள்

வெள்ளவத்தை கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிய பெண் சடலமாக மீட்பு


வெள்ளவத்தை கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிய பெண்  ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வெள்ளவத்தை கட்டடம் இடிந்து வீழ்ந்த சந்தர்ப்பத்தில் இந்தப் பெண் காணாமல் போயிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மீட்புப் பணிகளின் போது குறித்த பெண் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்காதநிலையில்  இன்றைய தினம் கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 21 பேர் காயமடைந்துள்ளனர். பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதுடன் மீட்புப் பணிகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply