இலங்கை

வழிபாட்டுத் தளங்கள் மீது தாக்குதல் நடத்துவோரை தண்டிக்குமாறு பிரதமர் உத்தரவு


மத வழிபாட்டுத் தளங்கள் மீது தாக்குதல் நடத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாதுகாப்புத்துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். முஸ்லிம் பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் மற்றும் ஏனைய வழிபாட்டுத்தளங்கள் மீது தாக்குதல் நடத்துவோரை தண்டிக்குமாறு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் அலரி மாளிகைக்கு பாதுகாப்பு உயர் அதிகாரிகளை அழைத்து இந்த அறிவுறுத்தலை பிரதமர் வழங்கியுள்ளார். குருணாகல் மல்லவபிட்டிய பள்ளிவாசல் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியிருந்தமை இவ்வாறு அறிவுரை வழங்குவதற்கான அண்மைய சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.  எந்தவொரு காரணத்திற்காகவும் மதவழிபாட்டுத் தளங்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதிக்க முடியாது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply