இந்தியா பிரதான செய்திகள்

டெல்லி மேல்-சபை நாடாளுமன்ற தேர்தல் ரத்து – தேர்தல் ஆணையகம் அறிவிப்பு:-


வெற்றிடங்களாக இருந்த டெல்லி மேல்-சபை நாடாளுமன்ற தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.

10 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் எதிர்வரும் ஜூலை மற்றும் ஓகஸ்ற் மாதங்களில் முடிவடையலுவுள்ள நிலையில் குறித்த 10 வெற்றிடங்களுக்காக எதிர்வரும் ஜூன் 8ம் திகதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதற்காக நேற்றையதினம் வேட்புமனு தாக்கல் ஆரம்பமாவதாக இருந்தது.

இந்நிலையில், இந்த தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்துள்ள தேர்தல் ஆணையகம் புதிய தேர்தலுக்கான திகதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் பணிகள் காணப்படுவதனாலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு குறித்து விளக்கமளிக்க அரசியல் கட்சிகளுக்கு விடுக்கப்பட்ட வாய்ப்பு ஜூன் 3ம் திகதி ஆரம்பமாவதனாலும் டெல்லி மேல்-சபை தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.