இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் பேருந்து ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. சர்தாம் யாத்திரைக்காக 29 பயணிகளுடன் உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் இருந்து கங்கோத்ரி நோக்கி ஒரு புறப்பட்டுச் சென்ற பேரூந்து பாகிரதி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மீட்பு பணியினர் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கைகள் காரணமாக 22 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் 7 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் பாகீரதி ஆற்றில் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்தனர் read more