விளையாட்டு

உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்றில் ரூனி இடம்பெறவில்லை.


உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்றில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் வெய்ன் ரூனி இடம்பெறவில்லை.  உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்றில் இங்கிலாந்து அணி அடுத்த மாதம் ஸ்கொட்லாந்துடன் விளையாட உள்ளதுடன் பிரான்சுடனும்; நட்புறவு போட்டி ஒன்றிலும் விளையாட உள்ளது.

இதற்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில்  இதில் நட்சத்திர வீரர் வெய்ன் ரூனியின் பெயர் இடம்பெறவில்லை.   முன்னைய போட்டி ஒன்றின் பொது  போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரூனி அழைக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

31 வயதான ரூனிதான் இங்கிலாந்து அணிக்காக அதிக கோல்களான  53 கோல்களை  அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply