இலங்கை

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகளை வழங்குமாறு பிரதமர் பணிப்புரை


அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு உதவிகளை வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நாடு முழுவதிலும் தற்போது சீரற்ற காலநிலையினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க நிதி ஒதுக்கீடுகளை செய்யுமாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

அலரி மாளிகையில் இன்றைய தினம் நடைபெற்ற  கூட்டமொன்றில் இதனைத் தெரிவித்துள்ளார். எவ்வித தடையும் இன்றி அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணங்களை வழங்க நிதியை வழங்குமாறு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply