விளையாட்டு

இந்திய கிரிக்கட் அணி பயிற்றுவிப்பாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன


இந்திய கிரிக்கட் அணியின் தலைமப் பயிற்றுவிப்பாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தற்போது அணியின் பயிற்றுவிப்பாளராக அணில் கும்ப்ளே கடயைமாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக விண்ணப்பங்கள் கோரப்படுவதன் மூலம் கும்ப்ளே பதிலீடு செய்யப்படுவாரா என்பது குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை.

கும்ப்ளே தனக்கும் அணி வீரர்களுக்கும் சம்பள உயர்வு கோரி வருவதாகவும் இதனால் இந்திய கிரிக்கட் வாரியம் கும்ப்ளே மீது அதிருப்தி கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கும்ப்ளேவின் பயிற்றுவிப்பின் கீழ் இந்திய அணி சிறந்த திறமைகளை வெளிப்படுத்தியுள்ளது. ஓராண்டு காலப்பகுதியில் இந்தியா ஒரு டெஸ்;ட் போட்டியில் மட்டுமே தோல்வியைத் தழுவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply