இலங்கை பிரதான செய்திகள்

சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 91 ஆக உயர்வடைந்துள்ளது

சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 91 ஆக உயர்வடைந்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிறுவனத்தினால் சற்று முன்னர் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடுமையான மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களினால் 110 பேரைக் காணவில்லை என அனர்த்த முகாமைத்துவ நிறுவனத்தின் பேச்சாளர் பிரதிப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். சபரகமுவா, மேல் மற்றும் தென் மாகாணங்களில் 53114 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். காலி மாவட்டத்தில் அனர்த்தம் காரணமாக 300 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 7157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
களுத்துறை மாவட்டத்தில் இயற்கை அனர்த்தங்களினால் 38 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரத்தினபுரி மாவட்டத்தில் 36 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

 

அதேவேளை நாட்டில்  பெய்து வரும் கனமழை காரணமாக களனி கங்கைக்கு  அருகில் உள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் இருப்பதாகவும்  இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால் களனி கங்கையை அண்மித்த பிரதேசங்களில் வசிப்போரை இன்று இரவிற்குள் பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளது

இணைப்பு 2 – சீரற்ற காலநிலையினால்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  26 ஆக அதிகரிப்பு – 42பேரை காணவில்லை

May 26, 2017 @ 09:48

சீரற்ற காலநிலையினால் ஏறபட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  26 அதிகரித்துள்ளதாக   இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.
மேலும் 42பேர் வரையில் காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

சீரற்ற காலநிலையினால் 13 பேர் உயிரிழந்துள்ளனர்

: May 26, 2017 @ 07:48

சீரற்ற காலநிலையினால் ஏறபட்ட அனர்த்தங்களினால் 13 பேர் உயிரிழந்துள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களம் உத்தியோகபூர்வமாக இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. மேலும் அனர்த்தங்கள் காரணமாக நான்கு பேரைக் காணவில்லை என உள்துறை அமைச்சர் வஜிர அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

புளத்சிங்கள பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் மட்டும் ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட மக்களை மீட்கவும் நிவாரணங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

1 Comment

Click here to post a comment

Leave a Reply

  • அனர்த்த வலயத்தில் சிக்குண்டு தவிக்கும் சகலருக்கும் உரிய உதவிகளை அரசு தடையின்றிச் செய்ய வேண்டும். பிறரின் துன்பத்தில் இன்பம் காணும் இழிவான இனமல்ல, எமது மானத் தமிழ் இனம்! எல்லோருக்கும் இறையருள் கிட்டட்டும்!
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers