இலங்கை

தொண்டராசிரியர்களுக்கான தீர்வினை துரிதப்படுத்தப்படுத்துமாறு பிரதமரிடம் கிழக்கு முதல்வர் கோரிக்கை

கிழக்கின் தொண்டராசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பில்  கிழக்கு முதல்வர் ஹாபிஸ் நசீர் அஹமட் இன்று பிரதமர் ரணில்விக்ரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டு வந்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஆகியோருக்கிடையில்  இ்ன்று முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே கிழக்கு முதல்வர் இந்த விடயத்தை பிரதமரிடம் எடுத்துரைத்தார்,

இதன் போது கிழக்கு மாகாணத்தில் உள்ள 445 தொண்டராசியர்களுக்கும் உடன் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிழக்கு முதல்வர் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து கல்வியமைச்சி்ன் செயலாளர் சுனில் ஹெட்டியராச்சியை உடன் அழைத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொண்டராசிரியர்களின் நியமனம் தொடர்பான தாமதத்திற்கான காரணங்களை கேட்டறிந்ததுடன் தொண்டராசியர்களுக்கு தீர்வினை வழங்கும் நடவடிக்கையில் கல்வியமைச்சையும் இணைத்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கிழக்கு முதலமைச்சருக்கு  பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்தார்.

இதன்போது தொண்டராசிரியர்களை நியமிக்கு விடயத்தை மாகாண கல்வியமைச்சிடம் கையளிக்க வேண்டும் எனவும் எனவும் கிழக்கு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்எனவும் கிழக்கு மாகாணசபையின் ஊடக குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply