நாட்டின் தற்போதைய இயற்கை அனர்த்த நிலையை கருத்தில் கொண்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களின் மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலக ஊழியர்கள் அனைவரினது விடுமுறைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அனைவரும் உடனடியாக சேவைக்குத் திரும்புமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாரேனும் அரச அதிகாரி வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு பணிக்குச் சமுகமளிக்க முடியாத நிலையில், அவருக்குப் பதிலாக மற்றொருவர் கடமையாற்ற வர வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மனிதவளப் பற்றாக்குறை ஏற்படுமிடத்து ஓய்வுபெற்ற அரச அதிகாரிகளை தற்காலிகமாகப் பணியமர்த்துவதற்கான முழு அதிகாரமும் பாதிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Add Comment