இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

“அக்குபஞ்சர்” நம்பிக்கைகளும் நம்பிக்கையீனங்களும்… – காதோடு காதாக அராலியூர் குமாரசாமி:-

யாழில். நவீன சிகிச்சை முறையான அக்குபஞ்சர் மருத்துவம் பற்றி பலர் பேசுகிறார்கள். இந்த சிகிச்சை முறை மூலம் நோயாளிக்கு நோயை குணப்படுத்துகிறார்களோ இல்லையோ தொடர்ந்து சிகிச்சையளித்து வருகிறார்கள். பல வருடங்களாக சிகிச்சையை பெற்று வருபவர்களிடம் இது சம்பந்தமாக கேட்டால் குணப்படுகிறதோ இல்லையோ தொடர்ந்து சிகிச்சையை மேற்கொண்டு வருகிறோம் என்ற பதிலை மட்டும் சொல்லுகிறார்கள். சிகிச்சை பலனளிக்காத போது அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் 1949 இல் சீனாவில் பலனளித்ததாக சொல்லப்படுகிறது. ஆனாலும் இந்த சிகிச்சை முறையானது 6 ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்டது என்று சொல்லப்படுகிறது. அந்த காரணங்களை வைத்து இன்றும் இந்த சிகிச்சை முறை நாடாளாவிய ரீதியில் பரவலாக்கப்பட்டு இடம்பெற்று வருகிறது. ஆனால் எந்தளவுக்கு இந்த சிகிச்சை முறை பயனளிக்கிறது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

வலிகாமம் கிழக்குப் பகுதியில் ஒரு அக்குபஞ்சர் சிகிச்சை நிலையம் இருக்கிறது. இந்த சிகிச்சை நிலையத்தில் கால் நோவு காரணமாக ஒரு வருடமாக சிகிச்சை பெற்று வந்த கோப்பாய் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவருக்கு சிகிச்சை பலனளிக்காது கால் செயலிழந்து போக கோப்பாய் அரச மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இவரை சேர்ப்பதற்கு வைத்தியசாலை அனுமதி மறுத்துவிட. யாழ்.போதானா வைத்தியசாலையில் சேர்த்தனர். இங்கு ஒரு வாரம் இருந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கும் சிகிச்சையில் பாராமுகம் காரணமாக மருத்துவரின் அனுமதியைப் பெற்று தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பல இலட்சம் ரூபாய் செலவு செய்து சிகிச்சை பெற்ற சம்பவம் ஒன்று கடந்த மாதம் இடம்பெற்றுள்ளது. இப்பொழுது அந்த குடும்பப் பெண்ணால் நடக்க முடிகிறது.

கோப்பாயைச் சேர்ந்த இன்னொரு குடும்பப் பெண் ஒருவர் தனது உடம்பு தோளில் வெள்ளை பரவுதலை கட்டுப்படுத்துவதற்கு பல வருடங்களாக இந்த அக்குபஞ்சர் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சிகிச்சை முறை மூலம் அவர் தனது வெள்ளை பரவுதலை தடுக்க முடியவில்லை. சிகிச்சைக்கு முதல் இருந்ததைவிட உடம்பு தோள் முழுவதும் வெள்ளை பரவிவிட்டது. பிறகு எதற்கு தொடர்ந்தும் இந்த சிகிச்சை முறையை மேற்கொள்கிறீர்கள். என்று கேட்டால் உடம்பில் வலி இல்லாமல் இருப்பதால் தொடர்ந்து மேற்கொள்கிறேன் என்று சொல்கிறார். இவர் தனது நோயை குணப்படுத்த முடியாமல் இருந்து கொண்டு இந்த பெண்ணையும் இங்கு கூட்டிக் கொண்டு சென்றுள்ளார். நல்ல வேளை கால் செயலிழந்து போக ஆரம்பித்த பின்னும் இந்த சிகிச்சையை மேற்கொண்டிருந்தால் கால் செயலிழந்து போக நடக்க முடியாமல் போயிருப்பார். தனது புத்திசாலித்தனத்தால் இந்த சிகிச்சையை மேற்கொள்ளவில்லை.

இது. உடலின் ஒரு இடத்தில் குத்தினால் குறிப்பிட்ட வலி அகன்றுவிடும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இன்றும் விளைவைத் தருவதாக இருக்கின்றன. அக்குபஞ்சரைப் பொறுத்தவரை நோயைப் பரிசோதிப்பதற்கு 12 உறுப்புகளின் செயல்பாடுகள், இரண்டு கைகளின் நாடி வழியாகப் பார்க்கப்படுகிறது.  மெரிடியன் என்ற வகைக்குக் கீழ் வரும் இதயம், கல்லீரல், சிறுநீரகச் செயல்பாடுகளை இடதுகை நாடி வழியாகப் பரிசோதிப்பார்கள். இதயத்துக்கு ஜோடியாகச் சிறுகுடல், கல்லீரலுக்கு ஜோடியாகப் பித்தப்பை, சிறுநீரகத்தின் ஜோடியாகச் சிறுநீர்ப்பை என ஆறு உறுப்புகளின் செயல்பாடுகள் கணிக்கப்படுகின்றன. வலது கையைப் பொறுத்தவரை, நுரையீரல் (பெருங்குடல்), மண்ணீரல் (வயிறு), இதய உறை-சிரை ஆகிய மூன்று உறுப்புகளின் செயல்பாடுகளும் அவற்றின் ஜோடி உறுப்புகளாக முறையே பெருங்குடல், வயிறு மற்றும் இடுப்பு வளையம், நெஞ்சுக்கூட்டுப் பகுதி, அடிவயிறு ஆகியவற்றின் நிலைகள் பரிசோதிக்கப்படுகின்றன. இந்தப் பரிசோதனைகளின் அடிப்படையில்தான் மருத்துவர்கள் சிகிச்சையைத் தொடங்குகின்றனர். உடலில் அதிகப்படியான உயிராற்றல் இருந்தால் நோயும் வலியும் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. குறைவான ஆற்றல் இருந்தாலும் நோய், வலி ஏற்படுவதற்கான வாய்ப்புண்டு.

‘அக்குபஞ்சர் என்பது லத்தீன் மொழியில் அகுஸ் (ஊசி), பஞ்சர் (குத்துதல்) என்ற இரு வார்த்தைகளைச் சேர்த்து உருவான சொல். ஊசியால் குத்துவதன் மூலமாக, உடலில் இருக்கக்கூடிய உயிர் ஆற்றல் பாதைகளில் நேரக்கூடிய அடைப்புகளைச் சரிசெய்வதுதான் அக்குபஞ்சரின் அடிப்படை.

என்னதான் 6 ஆயிரம்  ஆண்டுகளுக்கு முன்னர் இந்த சிகிச்சை முறையை மேற்கொண்டு வெற்றி கண்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அன்றைய காலப் பகுதியில் சிகிச்சை முறை அரியதாக இருந்தது. அதனால் இந்த அக்குபஞ்சர் சிகிச்சை முறையை கையாண்டிருக்கலாம். ஆனால் இன்றைய காலப் பகுதி சிகிச்சை முறைகளில் பல கருவிகள் கூட வந்துவிட்டது. நோயை உடனடியாகக் கண்டுபிடித்து சத்திரசிகிச்சை மூலமாவது நோயைக் குணப்படுத்தும் காலப் பகுதியில் இருக்கின்றவர்களுக்கு இந்த சிகிச்சை முறை எந்தளவுக்கு பயன்பெறப் போகின்றது என்பது கேள்வி எழுந்துள்ள நிலையில் இது குறித்து கனதியான ஆய்வுகளும், விளக்கங்களும் அவசியமாகிறது.

அந்த வகையில் அக்குபஞ்சர் வைத்திய முறையை கைக்கொள்ளும் வைத்தியர்கள் இந்த முறைமை குறித்து அதிக கவனம் செலுத்துதல் வேண்டும். இந்த முறைமையின் வெற்றிகள் குறித்து தெளிவுபடுத்த வேண்டும்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.