பிரிட்டிஸ் எயர்வேய்ஸ் விமான நிறுவனம் தனது சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. பிரிட்டிஸ் எயர்வேய்ஸ் விமான சேவையின் கணிணி கட்டமைப்பில் ஏற்பட்ட பாரிய தடை காரணமாக இந்த தற்காலிக சேவை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக பிரிட்டிஸ் எயர்வேய்ஸ் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிலமையை கருத்தில் கொண்டு கட்விக், மற்றும் ஹீத்ரோ விமான நிலையங்களுக்கு பயணிகள் சமூகமளிக்க வேண்டாம் என நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதேவேளை கணிணி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள இந்த தாக்கத்திற்கு சைபர் தாக்குதல் காரணமா என எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ள தொடர்புபட்ட அதிகாரிகள் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை பெறப்படவில்லை எனவும் இந்தப்பாதிப்பை நிவர்த்திக்க துரிதமாக செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
Add Comment