மத்திய லண்டனில் உள்ள வாட்டர்லூ புகையிரத நிலையம் அருகில் உள்ள ஓல்டுவிக் திரையரங்குக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலையடுத்து அங்கு இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இனந்தெரியாத நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து குறித்த திரையரங்கிற்கு வந்த காவல்துறையினர் அங்கிருந்த அனைவரையும் வெளியேற்றினர்.
அத்துடன் அருகில் இருந்த உணவகங்கள், விடுதிகளில் இருந்தவர்களும் வெளியேற்றப்பட்டதுடன் திரையரங்கை சுற்றியுள்ள அனைத்து வீதிகளும் மூடப்பட்டு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Spread the love
Add Comment