இலங்கையில் ஏற்பட்டுள்ள காலநிலை அனர்த்தம் தொடர்பில் ரஸ்யா கவலை வெளியிட்டுள்ளது. சீரற்ற காலநிலையினால் இலங்கையில் 122 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 97 பேர் வரையில் காணாமல் போயுள்ளனர். இந்த அனர்த்த நிலைமைகள் குறித்து ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டீன் இரங்கல் வெளியிட்டுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உத்தியோகபூர்வமான முறையில் இந்த இரங்கல் செய்தியை அனுப்பி வைத்துள்ளார். இந்த நெருக்கடியான தருணத்தில் ரஸ்யா மக்கள் இலங்கை மக்களுடன் துயரைப் பகிர்ந்து கொள்வதாக ரஸ்ய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Add Comment