இலங்கையில் நாளை முதல் மீளவும் கடுமையான மழை பெய்யக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் தொடாந்தும் மழையுடன் கூடிய காலநிலை நீடிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக மேல், சபரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்றைய தினம் கடுமையான மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே மழை வெள்ளம் காரணமாக பல மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add Comment