இலங்கை

இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்தம் தொடர்பில் அவுஸ்திரேலியா இரங்கல்


இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை தொடர்பில்  அவுஸ்திரேலியா இரங்கல் வெளியிட்டுள்ளது. மழை வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டு கொள்வதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜுலி பிஸொப், இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஸ டி சில்வாவிற்கு இரங்கல் செய்தியை அனுப்பி வைத்துள்ளார். இலங்கைக்கு தேவை ஏற்பட்டால் உதவிகளை வழங்க ஆயத்தமாக இருப்பதாக அவர் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply