இலங்கை

மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கி முடியும் வரையில் அரசாங்கத்தின் அனைத்து வாகனக் கொள்வனவு நடவடிக்கைகளும் இடைநிறுத்தம்


மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கி முடியும் வரையில் வாகனக் கொள்வனவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் அனைத்து வாகனக் கொள்வனவு நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் விசேட சலுகைகள் இடைநிறுத்தப்படும் எனவும் இதனை இடைநிறுத்தி மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை மீளவும் அமைத்துக் கொள்ள இருபது லட்சம் ரூபா வரையில் அரசாங்கம் நிதி உதவிகளை வழங்க உள்ளதாகவும்  உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு  நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த தொகை ஒரு மில்லியன் வரையில் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் அமரவீர தெரிவித்துள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.