வங்களா விரிகுடாவின் கிழக்குப் பகுதியில் சூறாவளி தாக்கம் ஏற்பட்டுள்ளது. மொரா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளி இலங்கையை விட்டு விலகிச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், சூறாவளி காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்தும் கடும் மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை காணப்படும் எனவும் மணிக்கு 80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேல், சபரகமுவ, தென், வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் இன்றைய தினமும் நாளையும் கடுமையான மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
Add Comment